யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது.
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
ஓ!! பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே!
கண்ணு பட்டு வாடிவுடும்
by , under
கரு கரு கரு கரு
கண்ணு பட்டு
வாடிவுடும் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது
எப்போவென்னு மாமியாரு
கேட்கும் முன்னே
அரை டஜன் பெத்து கொடுங்க
தக தக தக தக
தங்க சில தவிக்குது
வெட்கத்திலே போதும்
அதை விட்டுவிடுங்க
ஆராரிராரோ ஆராரிரரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாளத்துல
ஒன்னு ரெண்டு கத்துக்கொடுங்க
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ண அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்
முகத்திரை குள்ளே நின்று
கண்ணாம்பூச்சி ஆடினாய்
பொய்யாய் ஒரு மாலை கட்டி
பூவை செய்து சூடினாய்
நிழல்களில் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என
நித்தமும் நான் வாடினேன்
சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாருமினி
தேவை இல்லை.
கண்ணு பட்டு
வாடிவுடும் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது
எப்போவென்னு மாமியாரு
கேட்கும் முன்னே
அரை டஜன் பெத்து கொடுங்க
தக தக தக தக
தங்க சில தவிக்குது
வெட்கத்திலே போதும்
அதை விட்டுவிடுங்க
ஆராரிராரோ ஆராரிரரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாளத்துல
ஒன்னு ரெண்டு கத்துக்கொடுங்க
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ண அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்
முகத்திரை குள்ளே நின்று
கண்ணாம்பூச்சி ஆடினாய்
பொய்யாய் ஒரு மாலை கட்டி
பூவை செய்து சூடினாய்
நிழல்களில் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என
நித்தமும் நான் வாடினேன்
சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாருமினி
தேவை இல்லை.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
கண்கள் நீயே..காற்றும் நீயே! தூணும் நீ.. துரும்பில் நீ! வண்ணம் நீயே.. வானும் நீயே ஊனும் நீ.. உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் ...
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை ...
-
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன் நகரும் நெரு...
-
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் ப...
-
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் க...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் க...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால்...
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்க...
-
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்...
-
குறைந்தது நூறு முறை என் கடிதம் சுமந்து போனது கண்ணீரையும், கடந்தகாலத்தையும், வந்துஅழைத்துப் போங்களையும்... திடீரென்று எனக்குள் ஒரு கதவ...
