முடிந்தால் அவளையும் மகளே என்று விளி.
by , under
குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்...
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே...
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
"அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..."
புத்தர் சிரித்தார்
by , under
ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..
அந்தப் பதினொரு நாட்கள்
by , under
முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்...
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை...
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை...
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!
வீடு
by , under
நண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்...-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!
தீலிபா!
by , under
உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால்!
தமிழீழம் மலர்ந்ததின்று
by , under
தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .
வாழ்க்கைப் பிரச்சனை !
by , under
அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!
தொலைந்து போனேன் !
by , under
என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !
காதலின் சுவடுகள்
by , under
வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
கண்கள் நீயே..காற்றும் நீயே! தூணும் நீ.. துரும்பில் நீ! வண்ணம் நீயே.. வானும் நீயே ஊனும் நீ.. உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் ...
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை ...
-
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன் நகரும் நெரு...
-
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் ப...
-
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் க...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் க...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால்...
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்க...
-
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்...
-
குறைந்தது நூறு முறை என் கடிதம் சுமந்து போனது கண்ணீரையும், கடந்தகாலத்தையும், வந்துஅழைத்துப் போங்களையும்... திடீரென்று எனக்குள் ஒரு கதவ...
