Blog Entry

கண்கள் நீயே.. காற்றும் நீயே!

by , under

கண்கள்  நீயே..காற்றும்  நீயே!
தூணும்  நீ.. துரும்பில் நீ!
வண்ணம்  நீயே.. வானும்  நீயே
ஊனும் நீ.. உயிரும்  நீ

பல  நாள்  கனவே
ஒரு  நாள் நனவே
ஏக்கங்கள்  தீர்த்தாயே
இடையில்  பிழிந்து  உன்னை  நான்  எடுத்தேன்
நான் தான்  நீ ..வேறில்லை
முகம்  வெள்ளைத்  தாள்
அதில்  முத்தத்தால்
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே

இந்த  நிமிடம்  நீயும்  வளர்ந்து
என்னை  தாங்க  ஏங்கினேன்
அடுத்த  கணமே  குழந்தையாக
என்றும்  இருக்க  வேண்டினேன்
தோளில்  ஆடும்  சேலை
தொட்டில்  தான்  பாதி  வேலை
சுவர்  மீது  கிறுக்கிடும்போது
ரவிவர்மன்  நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன்
ஈடில்லா  என்  மகன்

எனைத்  தள்ளும்  முன்
குழி  கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன்  கண்ணே
எனை கிள்ளும் முன்
விரல்  மெத்தைக்குள்
என் முத்தத்தை  நான் தந்தேன்  கண்ணே

என்னை  விட்டு  இரண்டு  எட்டு
தள்ளிப்  போனால்  தவிக்கிறேன்
மீண்டும்  உன்னை  அள்ளி  எடுத்து
கருவில்  வைக்க  நினைக்கிறேன்

போகும்  பாதை  நீளம்
கூரையாய்  நீல  வானம்
பல  நூறு  மொழிகளில்  பேசும்
முதல்  மேதை  நீ
பசி  என்றால்  தாயிடம்  தேடும்
மானிட  மர்மம்  நீ
நான்  கொள்ளும்  கர்வம்  நீ

கடல்  ஐந்தாறு
மலை ஐநூறு
இவை  தாண்டித்  தானே
பெற்றேன்  உன்னை
உடல்  செவ்வாது  பிணி  ஒவ்வாது
பல  நூறாண்டு  நீ ஆள்வாய் மண்ணை.

4 Responses to 'கண்கள் நீயே.. காற்றும் நீயே!'

October 9, 2013 at 5:56 AM

Comment by திண்டுக்கல் தனபாலன்.

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

November 17, 2013 at 6:47 AM

Comment by s.p.raj.

All the best ......

September 11, 2014 at 2:59 AM

Comment by mahizhan.

amazing words superr

November 5, 2015 at 12:02 PM

Comment by venkat nat.

எனையே  பிழிந்து  உன்னை  நான்  எடுத்தேன்
நான் தான்  நீ ..வேறில்லை
முகம்  வெள்ளைத்  தாள்
அதில்  முத்தத்தால்
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே

என் தாயின் உணர்வையெனக்கு
உரைக்குமாறு ஒலிக்கச் செய்து
உள்ளத்தை வெண்ணையாய்
உருக்கி உயிர்க்கூட்டின்
அணுக்களை துளைத்த எழுத்தாணிக்கு நன்றி.

Post a Comment

Popular Posts