காஞ்சனையே காஞ்சனையே

by , under

காஞ்சனையே காஞ்சனையே
தீ மீது தேன் சிந்த வா வா (காஞ்சனையே)
எனது கவிதையில் முதல் வரி நீதான்
மொத்தக்கவிதையும் ஒரே ஒரு வரிதான்
இனி எந்தன்
வாழ்விலே
பெண்ணென்றால் நீ மட்டும் தான்

உன் பார்வை பட்டாம்பூச்சி
என் மேல் அமர்ந்தே செல்ல
நான் அந்த பாரம் பட்டு
விழுந்தேன் விழுந்தேன் மெல்ல

கைகள் கொடுத்து தூக்கி நிறுத்து
வீழ்த்தி சென்றவள் நீயல்லவோ
என்னை மீறி உன்னை எண்ணினேன்
ஒரு மின்னல் கீறி
இருள் அள்ளினேன்

இங்கு எந்தன் கடிகாரமும்
அதன் முட்கள் காட்டும் நொடிநேரமும்
உன்னைத்தான் சுற்றுது
இல்லையேல் முற்றுது
காதலை எங்கு போய் விற்பது?

தூங்காமல் காத்து காத்து
விழித்தே கழித்தே இரவை
ஏமாற்றம் தாளமல் தான்
தூதாய் தொடுத்தேன் நிலவை

தூக்கி எறிய தீயில் சரிய
காதல் மனமென்ன காகிதமா?
காலை மாலை இருவேளையும்
எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய்
ஒன்றும் நேரவில்லை என்று பின்- நீ
கள்ளம் சொல்லி என்னை தாண்டினாய்
ஏன் உன்னை சந்தித்தேன்
என்றே நான் சிந்தித்தேன்
என் இரு கண்களை
கண்டித்தேன்.

மின்னும் பனி சாறு உள் நெஞ்சில்

by , under

மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தான் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவிலா
பொன் மான் இவளா
உன் வானவிலா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா

தீப்போல் தேன்போல் சலணமே தான்
மதி என் நிம்மதி சிதயாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா

ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா

by , under

ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்

நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே

தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்
குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே தலை நீட்டி பேசப் பார்க்கும்
பார்க்கும் பொழுதே இரு கண்கள் கவி பாடும்
நாணம் அதிலே இடை வந்து போகுமே

அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை

கண்களே கமலாலயம்

by , under

கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணுஅணுவாய் எனை இழந்தேன்
இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்

கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இரு கருவிழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாமென்று
சொல்லி முடித்தேன் ஆமாமென்று
இரவு முடிந்தும்
போக மறுக்கும்
இனிய நிலவே

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன் ?
காலை வந்தும்
கலைய மறுக்கும்
இனிய கனவே

கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்

இது நடந்திடுமா கரை கடந்திடுமா
இது அலையல்லவா கடல் இழுத்திடுமா

இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே

நனைந்த பின்பும்
மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்

மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே

by , under

மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்

நெஞ்சின் ராட்டிணம் எனை சுற்றி தான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியினில் நான் பார்க்க

பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தில் காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே

முதல் முதல் வாழ்வில் தோன்றும்
வண்ண குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலை கண்டால் தாவிடும் மீனா

போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்

கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக் கொண்டு செல்வதை கனவு கண்டு விழிக்கிறேன்
கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன்
சேர்ந்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்

வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மறு முறை பார்க்கும் வரையில்
காக்கும் நேரம் கசப்பது ஏனோ

பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்து தானே தீரும்
அந்த நேரம் வந்ததாக
நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்.

கோடையின் வெயிலில்

by , under

கோடையின் வெயிலில்
கார்த்திகை குளிரில்
ஓடிடும் பகலில் ஓய்ந்திடும் இரவில்
நாட்டிலே யாவரும் நலம்
வீட்டிலும் யாவரும் நலம்

மஞ்சள் வெயில் வானிலே
மழையுடன் வானவில்
சிறிது இன்பம் துன்பம்
கலக்கணும் வாழ்விலே

கூக்கூவென ஒரு குயில் தேடிட

by , under

கூக்கூவென ஒரு குயில் தேடிட
வா வா என மறு குயில் கூவிட
காற்றே இரு குயில்களின் மாளிகையோ
இன்றே மாறிவிடுமா

ஆதாமுடன் ஏவாள் சேர்ந்ததும்
ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
மேகம் மழை துளிகளால் தூவியதே
விண்ணின் வாழ்த்து மடலா
பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா

கல்யாணம் மாசியிலே
அது நடக்காது
பெற்றோரின் ஆசியிலே
அதை விட மாட்டேன்
கண்டேனே ஒரு கனவு
அது என்னது
காஷ்மீரில் தேன் நிலவு
நினைப்பு தான்
தூண்டிலிலே
மாட்டிக்கொள்ளும்
ஒரு புழுவாய் நீ இருப்பாய்
மூட்டைப்பூச்சி போல் அறித்துடுவா
ஐயோ வயிறிங்கு எறிகிறதே

சிறகில்லா தேவதை நீ
தேவதையா ராட்சசி
தரை வந்த தாமரை நீ
தாமரையா அரளிப்பூ
உன் கைகள் பிடித்திடவே
வேஷக்காரி வேஷக்காரி
என் வாழ்வில் காத்திருந்தேன்
அண்டப்புழுகி
கூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியே
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ ரத்தக்குடி காட்டேறிதான் நீ!

தோகை விரித்தொரு ஆண்

by , under

தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
இருப்பக்கம் எறிகின்ற மெழுகாய்
ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும் உன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வழிகின்ற சுகம் காதல் தான்

அழகிய முகம் பளிச்சென நிறம்
அது என்னை கவந்ர்ந்தது மிக கொஞ்சமே
உலகத்தில் உள்ள அத்தனை பொன்னும்
உன்னுடைய குணம் ஆகி என்னை கொல்லுதே

பார்க்கும் யாருக்கும் பிடிக்கும் உன்னை
உன்னை போல் ஒரு ஜென்மம் அபூர்வம்
உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்
மெத்தாகி போனேன் மெத்தாகி போனேன்

எங்கே வந்தேன் எதற்க்கு உனை கண்டேன்
நமக்குள்ளே முடிச்சுகள் முடிந்தவை தான்
சுற்றம் தரும் சூழ்நிலை தரும்
இனி எந்த தடைகளும் தவிர்ந்தவை தான்

நூறு பெண்களை நீயும் ஏற்றால்
நூரில் ஒன்றென நானும் வாழ்வேனே
இந்த பிறவியில் உன்னை சேறும்
நாள் வரை வாழ்வேன்
இல்லையேல் சாவேன் இல்லையேல் சாவேன்

நெஞ்சில் நெஞ்சில் உன்பேர்

by , under

நெஞ்சில் நெஞ்சில்
உன்பேர் தானடா!
கண்ணில் கண்ணில்
உன் முகம்தானடா!
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே!
கண் ரெண்டும் மூடாமலே
கனாக்கள் வரவேண்டுமே!
ஒரே துளி இடம் கொடு
உன் தோளின் தேசத்திலே

ஒரே ஒரு கணம்

by , under

ஒரே ஒரு
கணம் போதுமே!
எந்தன் உயிர்
உன்னில் சேருமே..
தொடாத வீணை ஒன்றில்
அபூர்வ ராகம் தந்தாய்
இருண்ட என் வானிலே
நிலாவை போலே வந்தாய்..
என்னை தந்து
உன்னை பெறும்
விநோதம் ஏதோ செய்தாய்..

ஹரி கோரி போன்சாய்

by , under

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே
மௌனங்கள் அழகு தான்

ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
நின்னால் பெண்ணாலே..

தேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா!

ஒரே ஞாபகம்

by , under

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்

பனித்துளி பனித்துளிப்

by , under

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

Popular Posts