நான் போகிறேன் மேலே மேலே

by , under

நான் போகிறேன் மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்

(நான் போகிறேன்..)

ஏனோ ஏனோ பனித்துளி

by , under

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டி மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை தீராதே
ஆலை தென்றல் பாட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தான்
நதிகளின் வரும் வானால் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவை போலே நீயில்லாமல் தேய்ந்தேன்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகிது உருகிது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே …

நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசி போட்ட வார்த்தை இல்ல அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் ஆலை ஒன்றும் வாங்கி வந்தாயா
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஓஹோ ஓஹ்ஹோ திரும்பியும் என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய்
பாட்டை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டி மாட்டாயே

ஒரு வெட்கம் வருதே வருதே

by , under

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே…..
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..
இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே….
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே….
துடித்துடித்திடும் மனமே…
வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே…. நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால்…..உறங்குவேன்

ஆணின் மனதிற்க்குள் ….
பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே …
நெஞ்சம் துடிக்கிறதே

பெண்:
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே….

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே…

தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே…
தில்லாரே தில்லாரே……..
ஓஹோ ஹா….

காற்றில் கலந்து நீ
என் முகத்தினை
நீயும் மோதினாய்….
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்……

ஓ….
தூது அனுப்பிடவே …
நேரம் எனக்கில்லையே…
நினைத்தப்பொழுதினிலே…
மரணம் எதிரினிலே….

வழிகளில் ஊர்கோலம்
இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே
நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே…..

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே…

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை

by , under

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே....
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
நீ தூரப் பச்சை... என் நெடுநாள் இச்சை....
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத் தீவே...

தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உனை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...

குழு: விழியே.. ஆ கைபா கைபா..
மடியே.. ஆ கைபா கைபா..
விழியே.. ஆ கைபா கைபா..
மடியே.. ஆ கைபா கைபா..

உதய்க்கும் மலைகளிலே..
மிதக்கும் படையெனவே..
மறைக்கும் முகிலிடையே..
சிரிக்கும் முழு நிலவே..

அடக்கம் தடுக்கிறதே..
அதட்டிப் பிடிக்கிறதே..
நெருங்கி வருகையிலே..
நொறுங்கி உடைகிறதே..

உன் நெஞ்சில் இட்டு என்னைத் தாலாட்ட..
என் கர்வம் எட்டிப் பார்க்கும் வாலாட்ட..
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய் பாராட்ட.... (சிறு பார்வையாலே...)

சிலிர்க்கும் செடிகளிலே..
துளிர்க்கும் முதல் இலையே..
இனிக்கும் கரும்பினிலே..
கிடைக்கும் முதல் சுவையே..

விழுந்தேன் இரவினிலே..
எழுந்தேன் கனவினிலே..
கனவில் நீ வந்தாய்..
மறந்தேன் வெளிவரவே...

ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே...
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே...

நீ கொஞ்சும் போது பாழும் நஞ்சு...
ஆனால்கூட அள்ளி உண்பேனே....

ஆ ஆ ஆ ஆ அடி பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே..
நீ தூரப் பச்சை.. என் நெடுநாள் இச்சை..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைப் தீவே...

தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா....

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

by , under

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

(கண்கள் இரண்டால்)

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

by , under

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட(கேட்டு)
என்னை உன்னை எண்ணியோ யாரோ
எழுதியது போலவே தோன்ற (என்னை)

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த
நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றே
எனக்கே விடைகள் தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே குதித்துப்போவதேன் நில்லுங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ

தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்

கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்

உயிரின் உயிரே

by , under

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக்கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரைத் தேடும்
விலகிப்போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
(உயிரின் உயிரே)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணைமுறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ

கள்ளி அடி கள்ளி

by , under

கள்ளி அடி கள்ளி
எங்கே கண்டாய்
முதல் என்ன கரைச்சாய்
உண்மை எல்லாம் சொல்லு

சிரித்திடும் வாவி கரையோரம்
காத்து நான் கிடந்தனன்
பதிங்கி மெல்ல வந்தவன்
பகுடி பகுடி என்ன போங்கடி

முழு நிலவு காயும்
நிலவில் மீன்கள் வாடும் தேன்நாடு
அங்கே இருந்து இங்கே
வாழ வந்த பெண்ணே நீ பாடு

நம்மை அணைக்க ஆளில்லை
என்று பதறிக் கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே
தமிழர் சொந்தம் நாம் என்னாளும்

ஓ.. நல்லூரின் விதியென்று
திரிந்தோமடி
தேரின் பின்னே
அலைந்தோமடி

கடலொன்று நடுவிலே
இள்ளை என்று கொல்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும்
ஒன்றுதான்

தமிழன் தமிழந்தான்

புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா?

நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகத்தான்
இங்கும் உறவு உள்ளது
தமிழர் மனது பெரியது

அட உனக்கென்ன வந்த இடத்தில்
மருமகள் ஆகினாய்..

ஏய் புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே

எந்த கலங்கமும் இல்லை என்று
ஆகுதே தெருடி வாழ்வாயே

கள்ளி அடி கள்ளி உங்கள் கைகள்
இணையும் அந்தப்பொழுதில் எங்கள் வாழ்க்கை விரியும்
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்
அந்த கதிரின் சுடராய் எங்கள் விடியல் தெரியும்
கனவுகள் எனது என நினைத்தேன்
இன்று நான் அறிந்தனன்
இருளின் கரம் விலகுமே
உங்கள் கனவும் நனவாகும்...

ஒன்றா ரெண்டா ஆசைகள்

by , under

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா
(ஒன்றா ரெண்டா)

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்
(ஒன்றா ரெண்டா)

சந்தியாக்கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே

அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா....

Popular Posts