சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்

by , under

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா
(பட்ட..)

அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே

தூது வருமா தூது வருமா

by , under

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுனிதா சாரதி, ஃபெபி மணி
வரிகள்: தாமரை

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே

by , under

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்

தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா

Popular Posts