லோலிதா! லோலிதா..!

by , under

லோலிதா! லோலிதா..!
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

கொட்டும் போதே மழை குட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை குள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில்கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே!

எங்கேயும் காதல்

by , under

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே

Popular Posts