விழியே விழியே!

by , under

விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

கதிரவனாக பிரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி

அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல் போனில் பதிப்பேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிறப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ
தவமே செய்யாத வரம் நீ
பெண் கடலே முத்தங்கள் இடு நீ

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ.

அறிந்தால்!

by , under

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

ஒரு தப்பு தந்த செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே

ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்

அறிந்தால் அறிந்தால் அறிந்தால்

Popular Posts